சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக முக ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் இன்று சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி NO CAA, NRC, NPR என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை இன்று காலை தொடங்கியபோது அனைவருக்கும் காலை வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் கூறி ஆளுநர் உரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply