சசிகுமார்-சரத்குமார் இணையும் புதிய படம்

சசிகுமார் ஹீரோவாக நடித்து வரும் படம் ஒன்றில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்துள்ளார். முதல்முறையாக இருவரும் ஒரே படத்தில் நடித்து வருவதால்இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் நிர்மல்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தமன்னா தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *