சசிகலா பரோல்: தமிழக காவல்துறை அனுப்பிய மின்னஞ்சல்

சசிகலா பரோல்: தமிழக காவல்துறை அனுப்பிய மின்னஞ்சல்

சசிகலாவுக்கு பரோல் கொடுக்கும் விஷயத்தில் கர்நாடக காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு தமிழக காவல்துறை மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளது. எனவே இன்று மாலை சசிகலா பரோலில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் கணவரை பார்க்க அனுமதிக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா பரோல் மனு விண்ணப்பித்திருந்தார். சசிகலாவின் பரோல் மனு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதுகுறித்து சில விளக்கங்கள் கேட்டு தமிழக காவல்துறைக்கு கர்நாடக காவல்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த கடிதத்திற்கு தமிழக காவல்துறை இன்று மின்னஞ்சல் மூலம் பதில் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சசிகலா இன்று பரோலில் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.