சசிகலா எப்போது விடுதலையாவார்?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் நிலையில் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில் சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாது என்றும்,
ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் சசிகலா விடுதலையாக வாய்ப்பு என கூறியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

சசிகலா விடுதலையானால், தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply