சங்கத்தமிழில் இடம் பிடித்த விஜய்சேதுபதி மகள்

சங்கத்தமிழில் இடம் பிடித்த விஜய்சேதுபதி மகள்

விஜய்சேதுபதி நடித்து வரும் பல திரைப்படங்களில் ஒன்று ‘சங்கத்தமிழன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஒரு சிறிய கேரக்டரில் விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் வெளியாகவுள்ள ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கத்தமிழன் படத்தில் மகள் ஸ்ரீஜாவை நடிக்க வைத்திருந்தாலும் தொடர்ந்து அவரை சினிமாவில் நடிக்க வைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply