க்ளினிங் வேலை செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ.650 சம்பளம்: சில மணி நேரத்தில் விளம்பரத்தை மாற்றிய பிரபல ஓட்டல்

க்ளினிங் வேலை செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ.650 சம்பளம்: சில மணி நேரத்தில் விளம்பரத்தை மாற்றிய பிரபல ஓட்டல்

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரபலமான ஓட்டலான ‘பிரிமியம் இன்’ என்ற ஓட்டலில் க்ளினிங் வேலை செய்ய ஆட்கள் தேவை என்றும், இந்த வேலைக்கு சம்பளமாக மணி ஒன்றுக்கு £7.75 என்றும் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.650 என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வேலைக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்ததாம். அதுதான் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ரோமானிய மொழி தெரிந்திருக்க வேண்டும்

இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு மணி நேரத்தில் விளம்பரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ரோமானிய, போலந்து, ரஷ்யன் மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாற்றம் செய்யப்பட்டதோடு தவறுதலாக முதல் விளம்பரம் வெளியானதற்கு ஓட்டல் நிர்வாகம் வருத்தமும் தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published.