கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் கோவை தெற்கு தொகையை அவர் தேர்வு செய்துள்ளார்

இந்த நிலையில் இன்று அவர் கோவையில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply