கோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி அந்நாட்டின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

நான் இப்போது கால்பந்து விளையாடும் மக்களின் தேசத்தில் இருக்கிறேன். கோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும். கோல் எடுப்பதுதான் கால்பந்து வீரருக்கு ஒரே குறிக்கோள்

எங்களுக்கும் அப்படித்தான் முக்கியமான கோல் நிறைய இருக்கிறது. கடந்த 5 வருடங்களில் நாங்கள் பல இலக்குகளை அடைந்து இருக்கிறோம். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் வெற்றிபெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்

உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

Leave a Reply