கோலம் போட்ட 6 மாணவிகள் திடீர் கைது: சென்னையில் பரபரப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று நூதன போராட்டம் ஒன்றை நடத்திய 6 மாண, மாணவிகள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் உள்ள தெருக்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலத்தை போட்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று கோலம் போட்ட மாணவ மாணவிகளை கைது செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

அதன் பின்னர் விசாரணைக்கு பின்னர் 6 பேர்களும் விடுவிக்கப்பட்டனர். கோலம் போட்ட மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை, குடியுரிமை திருத்தச் சட்டம், Against CAA, Against NPR, கைது, கோலம், rangoli, students,

Leave a Reply