கோலமாவு கோகிலா இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அவர் ரவிகுமார், பி.எஸ்.மித்ரன், பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்களது இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நண்பர்களில் ஒருவருமான இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும், அந்த படம் அவருடைய 18வது படமாக உருவாகவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்திற்கு அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதவுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வாகி வருகின்றனர்

 

Leave a Reply