கோதுமையில் இடியாப்பம் செய்வது எப்படி?

கோதுமையில் இடியாப்பம் செய்வது எப்படி?

நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் உகந்தது. இன்று கோதுமை மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவை இட்லி வேகவைப்பது போல, ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.

வேக வைத்த மாவு ஆறியபின், உப்பு சேர்த்து, வெதுவெதுப்பான நீர்சேர்த்து, சப்பாத்தி மாவு போன்று பிசையவும்.

இடியாப்ப அச்சில் மாவை நிரப்பி, இட்லி தட்டில் பிழிந்து, ஆவியில் வேகவிடவும்.

இதைக்குருமாவுடன் பரிமாறலாம். அல்லது காய்கறி மசாலாவுடன் கலந்து உப்புமா போன்றும் பரிமாறலாம்.

Leave a Reply