கொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா?

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என தமிழக போலீசார் பெங்களூர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு செய்திருந்தனர்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முருகனை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து முருகனை சென்னை மற்றும் மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்

இந்த விசாரணையின்போது முருகனிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து தெரியவரும் என்றும், குறிப்பாக முருகனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகள் யார் யார்? என்பது தெரிய வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

தெலுங்கு மற்றும் தமிழ் நடிகைகள் பலருடன் முருகன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விசாரணையில் அந்த நடிகைகள் யார்? என்பது குறித்த உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply