கொள்ளையடித்த நகைகளை பிரபல நடிகைக்கு பரிசாக கொடுத்த முருகன்: திடுக்கிடும் தகவல்

கொள்ளையடித்த நகைகளை பிரபல நடிகைக்கு பரிசாக கொடுத்த முருகன்: திடுக்கிடும் தகவல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகன் மற்றும் அவனது கூட்டாளியான சுரேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது
அதில் திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை பிரபல முன்னணி தமிழ் நடிகை ஒருவருக்கு பரிசாக அளித்ததாகவும், அதன்பின்னர் அந்த நடிகையை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

ஆனால் அந்த நடிகை பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் தன்னால் இப்போது கால்சீட் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும் முருகன் மற்றும் சுரேஷ் கொடுத்த நகைகளை மட்டும் அவர் பரிசாக பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அந்த பிரபல நடிகையிடம் போலீசார் விசாரணை செய்யத் திட்டமிட்டுள்ளனர் இந்த நடிகை விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது,.

இந்த நடிகை மட்டுமின்றி முருகன் மட்டும் சுரேஷ் ஆகியோருடன் தொடர்பில் உள்ள பல நடிகைகள் தற்போது அதிர்ச்சியில் உள்ளார்களாம். தங்களிடமும் போலீசார் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம் என்ற என்ற நிலை இருப்பதே இந்த நடிகைகளின் அதிர்ச்சிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply