கொள்ளிடம் ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அளக்குடியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பொதுப்பணித்துறை சார்பில் 3000 மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்கள் அடைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் 300 சவுக்கு கட்டைகளும் அடைக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது.

பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சிவசங்கர் பார்வையிட்டனர்.

அமைச்சர் மெய்யநாதன் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கூறுகையில், கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட. தடுப்பணை அறிவிப்பு மக்களுக்கான வெற்று அறிவிப்பு. தற்போது அளக்குடியில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கவும், தடுப்பணை மற்றும் கதவணை அமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்