கொல்கத்தாவை சிதைத்த சிராஜின் சாதனைகள்!

நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் முகமது சிராஜ் மொத்தம் தனது 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரர் 2 மெய்டன் வீசிய சாதனை செய்தார்

மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி 4 மெய்டன்கள் எடுத்தது இந்தப் போட்டியில்தான். முகமது சிராஜ் 2 மெய்டன்கள், மோரிஸ், சுந்தர் தலா ஒரு மெய்டன் ஓவர் வீசினர்.

கொல்கத்தா அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 2 ரன்கள் சேர்த்ததுதான் ஐபிஎல் வரலாற்றில் 2-வது மிகக்குறைந்த ஸ்கோராகும்.

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறிய தோனி தொடர் தோல்வியை அடைந்து வரும் நிலையில் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்த விராத் கோஹ்லி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார்

Leave a Reply