கொரோனா நோயாளியின் படுக்கையில் புழுக்கள்: அதிர்ச்சித் தகவல்

கொரோனா நோயாளி குணப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவரின் படுக்கையை சுத்தம் செய்ய போது அந்த படுக்கையில் ஏராளமான புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கூலி தொழிலாளியான அனில்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து அவர் குணமாகி நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

அதன் பின்னர் அவருடைய படுக்கையை சுத்தம் செய்த போது அந்த படுக்கையில் புழுக்கள் இருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிடம் அவர்கள் புகார் அளித்துள்ளார்

இது குறித்து உடனடியாக விசாரணை செய்து அறிக்கை தருமாறு மருத்துவனை நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Leave a Reply

Your email address will not be published.