கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு?

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரு சிலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க விரும்பாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் லட்சக்கணக்கில் பணம் கட்டணமாக பெறுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனையடுத்து கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டிய கட்டணம் குறித்து அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்த போது கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவ மனைகள் வாங்க வேண்டிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு பெற வேண்டிய கட்டணங்கள் குறித்து அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply