கொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கோயிலில் கிரிவலம் செல்ல தடை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் கோவில் திருவிழாக்கள் பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்துக் கொள்கிறோம்

சமீபத்தில்கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து என்றும் ஒரு சில வைபங்கள் மட்டும் நடைபெற அனுமதி என்றும் சில வைபங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் நடத்த செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த தடையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply