கொரோனாவுக்கு பலியான 22 வயது சென்ற இளம்பெண்:

பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களாகவே கொரோனாவுக்கு இளவயது நபர்களும் பலியாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது 22 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 26ஆம் தேதி கொரோனா அறிகுறியுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்னுக்கு 27ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

அவருக்கு ஏற்கனவே டயாலிசிஸ் உள்ளிட்ட ஒருசில நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply