கொரோனாவால் பெற்றோரை இழந்தால் 10 லட்சம் ரூபாய்: முதல்வர் அறிவிப்பு!

கொரோனா காரணமாக பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்

ஆந்திராவில் பெற்றோரின் இழந்த குழந்தைகளின் பெயரில் ரூபாய் 10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்படும் என சற்றுமுன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு செய்துள்ளார்
இந்த வைப்புத் தொகையாக குழந்தையையோ அவர்களின் பாதுகாவலர்களையோ சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்

இந்த உத்தரவு ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது