’கொம்பன்’ முத்தையா படத்தில் இணைந்த ’சூரரை போற்று’ நாயகி

கார்த்தி நடித்த கொம்பன் உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்த நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது இந்த படத்தையும் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மேலும் ஒரு ஹீரோ நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது