கொட்டும் மழைக்கு இடையே சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜை -பக்தர்கள் சாமி தரிசனம்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும் இந்த ஆண்டுக்காண நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது.

நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற்றது .இதனை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .தொடர்ந்து இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு ஆவணி மாதம் மலையாள மாத சிங்க மாத பூஜைக்காக வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது .

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்