கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

இந்நிலையில் அக்டோபர் 1 முதல் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது

கொடைக்கானலில் உள்ள பசுமை பள்ளத்தாக்கு, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, மற்றும் தூண் பாறை போன்ற சுற்றுலாத் தலங்களை வரும் அக்டோபர் 1 முதல் சுற்றிப்பார்க்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஐந்து மாதங்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த சுற்றுலா பயணிகளுக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *