கைது செய்ய வந்த போலீஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாஸ்

கைது செய்ய வந்த போலீஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாஸ்

திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸை கைது செய்ய இன்று அதிகாலை நெல்லை போலீஸ் அவருடைய வீட்டிற்கு வந்த நிலையில், போலீசுக்கு டிமிக்கு கொடுத்து சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தே‌வர் பேரவையைச்‌ சேர்ந்த முத்தையா என்பவரின் காரை சேதப்படுத்திய வழக்கு குறித்து கருணாஸிடம் விசாரணை செய்ய நெல்லை காவல்துறையினர் இன்று அதிகாலை சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை எம்.எல்.ஏ கருணாஸின் வீட்டைச்‌சுற்றி நெல்லை போலீசார் கண்காணித்துள்ளனர்‌. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. நெல்லை போலீசார் சென்னையில் முகாமிட்டு கருணாஸை தேடிவந்த நிலையில் தற்போது கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் பின் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.