கே.எல்.ராகுல் அபாரம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தற்போது ஆக்லாந்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்றும்விடும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்தது. குப்தில் மற்றும் செய்ஃபர்ட் தலா 33 ரன்களும் முன்ரோ 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் புமா, தாகூர் மற்றும் டூபே தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்

133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார். ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply