இதுதான் குடியுரிமை போராட்டத்தின் லட்சணமா? பாஜக பிரமுகர் விளாசல்!

இதுதான் குடியுரிமை போராட்டத்தின் லட்சணமா? பாஜக பிரமுகர் விளாசல்!

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் சிலர் ஆவேசமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வீடியோக்கள் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டர் தளத்தில் குடியுரிமை சட்டம் குறித்து தாங்கள் என்ன கேள்வி கேட்போம் என்பதையும், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்

இந்த வீடியோவில் பதில் சொல்லவிருக்கும் மாணவருக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப் படுகிறது. இதுதான் உங்கள் போராட்டத்தின் லட்சணமா? என்று அந்த பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.