கேரள வெள்ளம்: பிரதமரிடம் பேசிய ராகுல்காந்தி

கேரளாவில் கனமழை பெய்து வருவதை அடுத்து அம்மாநிலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. கனமமழை காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கனமழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டு வருவதால் ஒருசில உயிர்களும் பலியாகியிருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர கோரி பிரதமர் மோடியிடம், ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளார். ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

 

Leave a Reply