அசுரன் பட நாயகியின் இன்ஸ்டாகிராம் பதிவு

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா என்பவருக்கும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு தலைவர் முகமது ரியாஸ் என்பவருக்கும் நேற்று முதல்வர் இல்லத்தில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் சார்பில் வெறும் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டு சமூக இடைவெளியையும் கடைபிடித்தனர்

இந்த நிலையில் முதல்வரின் மகளுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

எனது அருமை வீணா அவர்களே உங்கள் திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை வாழுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *