shadow

ummanகேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்களை அச்சு அசலாக உரித்து வைத்ததுபோல் ஒருவர் சவுதி அரேபியாவில் வாழ்ந்து வருகிறார். அவருடைய புகைப்படம் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சவுதி அரேபியா நாட்டில் ஜேசன் என்ற நகரில் வசித்து வரும் ஹசன் அல் அன்சாரி என்பவரின் புகைப்படம் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் வெளியாகியது. கேரளாவை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் இவரை பார்த்து, இவர் தங்கள் மாநில முதல்வரை போல இருந்ததால், அவரை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் நகலாக இருக்கும் ஹசன் அல் அன்சாரியின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பிரபலமாகி வைரலாக பரவத் தொடங்கியது. இந்த புகைப்படத்தை கண்டு வியந்த கேரளாவைச் சேர்ந்த சிலர், இப்புகைப்படத்தை முதல்வரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தனர். இந்த புகைபடத்தை பார்த்து அதிசயித்த முதல்வர்,  தன்னைப் போன்றே அச்சு அசலாக இருக்கும் சவுதி நாட்டவரைகேரளாவுக்கு வருமாறு அல் அன்சாரிக்கு அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட அல் அன்சாரி விரைவில் திருவனந்தபுரம் வரவுள்ளதாகவும், உருவ ஒற்றுமையுள்ள இருவரும் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே உம்மன் சாண்டியைப் போலவே கனடா நாட்டிலும் ஒருவர் வசிப்பதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply