பரபரப்பு தகவல்

ஒரு மாநில முதல்வரின் வீட்டு திருமணம் என்றால் ஆயிரக்கணக்கானோர் கூடி மணமக்களை வாழ்த்துவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் கேரள முதல்வரின் மூத்த மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றபோது வெறும் 20 பேர் மட்டுமே அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதாக வெளிவந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வரும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு தலைவருமான முகமது ரியாஸ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது

முதல்வரின் வீட்டில் நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் மிக நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முதல்வர் திட்டமிட்டு இருந்தாலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக முதல்வரின் வீட்டிலேயே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *