கேரள மக்களுக்கு நேரடியாக நிதியுதவி செய்த விஜய்

கேரள மக்களுக்கு நேரடியாக நிதியுதவி செய்த விஜய்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.. இந்த பணத்தை விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக கேரள மக்களுக்கு தனித்தனியே சென்றடையும் வகையில் வழிவகை செய்துள்ளார்.

இவ்ஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக்கணக்குகளை பெற்று அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை பெறும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனடியாக அந்தந்த பகுதி மக்களிடம் இந்த பணத்தை நேரடியாக பணமாகவோ அல்லது அவர்கள் விரும்பும் பொருளாகவோ கொடுக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனால் விஜய் கொடுத்த பணம் அடுத்த சில மணி நேரங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சென்றடைகிறது.

விஜய்யின் இந்த வித்தியாசமான முறையை அனைவரும் பின்பற்றலாமே என கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply