அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா, கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக வெகுவிரைவில் மாறும் என்று கூறப்பட்டது. அந்த அளவுக்கு அம்மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா நோயாளிகள் குறைந்து வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கேரளாவில் கொரோனா தொற்று தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்துவிட்டது.

கேரளாவில் இன்று புதிதாக 108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,029ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply