கேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்

கேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் கேன் வாட்டர் விலைக்கு வாங்கி தங்கள் குடிர்நீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து கேன் வாட்டர் உற்பத்தி நிலையங்களும் இன்று மாலை முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.