கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பரபரப்பு தகவல்

 

கடந்த 7 நாட்களாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வந்ததால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் திண்டாட்டத்தில் இருந்தனர்

இந்த நிலையில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது

கேன் குடிநீர் ஆலைகள் உரிமத்தை புதுப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதை கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது

இதனையடுத்து கடந்த ஏழு நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்றதால் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் இன்று மாலை முதல் நிலைமை சகஜமாகிவிடும் என்று கூறப்படுகிறது

Leave a Reply