கூடைப்பந்து வீரர் கோப் மறைவிற்கு தனுஷ், அனிருத் இரங்கல்

கூடைப்பந்து வீரர் கோப் மறைவிற்கு தனுஷ், அனிருத் இரங்கல்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோபி பிரயண்ட் என்பவர் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் அவரது 13 வயது மகளும் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் 5 பேரும் பலியானதாக கூறப்படுகிறது

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து தனது மகளுடன் கோப் ஹெலிகாப்டரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்தில் நடைபெற்றதாக தெரிகிறது இது குறித்து அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கோபி பிரயண்ட் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவருடைய தீவிர ரசிகர்களாகிய தனுஷ் மற்றும் அனிருத் தனது டுவிட்டர் பக்கங்களில் கோப் மறைவிற்கு தங்களது இரங்கலையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.