கூகுள் நியூஸ், டிஸ்கவரை அடுத்து ஷோகேஷ்: செய்தி ஊடகங்களுக்கு ஜாக்பாட்

கூகுள் நிறுவனத்தின் கூகுள் நியூஸ் மற்றும் டிஸ்கவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த வசதியில் சிறந்த செய்திகள் வரிசைப்படுத்தி காண்பிக்கப்படும் என்றும் இதில் மிகச் சிறந்த செய்திகளுக்கு கூகுள் நிறுவனம் சன்மானம் தரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே பல நாடுகளில் இந்த வசதி இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவிலும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் அறிமுகப்படுத்த உள்ள இந்த வசதி விரைவில் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளிலும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சிறந்த செய்திகளைத் தரும் ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனமே ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது