குழந்தை பிறந்த ஒன்றரை மாதம் கழித்து திருமணம் செய்தார் செரீனா வில்லியம்ஸ்

குழந்தை பிறந்த ஒன்றரை மாதம் கழித்து திருமணம் செய்தார் செரீனா வில்லியம்ஸ்

உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், அந்த குழந்தைக்கு காரணமான காதலர் அலெசி ஒகானியனை நேற்று செரீனா திருமணம் செய்து கொண்டார்

ஏற்கனவே இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது முடிந்துள்ள நிலையில் நேற்று அதிக ஆடம்பரம் இன்றி திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்து கொள்வேன் என்று செரீனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply