குழந்தை இறந்து 12 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டதா? அதிர்ச்சி வீடியோ

குழந்தை இறந்து 12 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டதா? அதிர்ச்சி வீடியோ

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை கடந்த வெள்ளியன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணியினர் தீவிரமாக போராடி வருகின்றனர்

மீட்பு பணிகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடியவே தற்போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ’குழந்தை இறந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதாகவும் மீடியா வேண்டுமென்றே இந்த தகவலை மறைத்து உள்ளதாகவும், குழந்தையின் கை மட்டுமே தெரிவதாகவும் மற்றதெல்லாம் மண்மூடி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குழந்தையை மீட்க மீட்புக்குழுவினர் போராடி வரும் நிலையில் இப்படி ஒரு உறுதி செய்யாத தகவலை சமூக வலைதளத்தில் பரப்புவதும், லட்சக்கணக்கானோர் குழந்தை பிழைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் இவ்வாறு ஒரு வதந்தியை கிளப்புவதும் சரியா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது

https://www.facebook.com/Mr.Rajaaaa/videos/413869846224867/?__xts__[0]=68.ARD8U1-gFBH207_IGLqKuadUnjq8jfS70vsDJy6hWqObPsQlI-ZpzS-3ZR3aOyzwTTEDrxBU-8se7Kmd8Oeem-d6uE_dtIdhnCg_7_0JbuBw2DT3K7iziUrzdq9KXhEDtnje-ADL5oDVMlFeSpAZ03J-Qj00ePnkAXic58ycOBbqtLLVt0O61IAdkA8VJmEh66slepLnmoBLDPod-c2gMoj1Oj9Bxbk9QB1fv5yVncwV1o3jCa9O1IJAYScXQNnEc8f5EL-Wf7r_hPgyb041_BSuk0WsiyzbY9Kjip1bQ9NlWD9f_Jgoe6J3pqhjgYfobo8HesVsgrP6hoG2dh5Wh5shHG7ZBIb9WV8&__tn__=-R

Leave a Reply