குழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்

சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயவு தாட்சண்யமின்றி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்

குழந்தைகள் ஆபாச படம் விவகாரம் குறித்து ஏற்கனவே திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திருச்சி கன்டோண்மெண்ட் பகுதியில் சிறார் ஆபாச படங்களை விநியோகம் செய்ததாக காதர் பாட்ஷா, ஷேக் அப்துல்லா ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply