குழந்தைகளை தத்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: அமைச்சர் சரோஜா

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தேவைப்பட்டால் மட்டுமே சத்துணவு அமைப்பாளர்கள் புதிதாக பணியமர்த்தப்படுவர் என்றும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் தந்து அதன் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தத்தெடுப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் சட்டபூர்வமின்றி பலர் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் இதனை தவிர்க்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply