குமரியில் முழு அடைப்பு: பாஜக போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரியில் முழு அடைப்பு: பாஜக போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து பாஜக இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும் குமரியில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதியில் உள்ளனர். அதேபோல் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய முழு அடைப்பை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இப்பல்கலையின் துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

சபரிமலை, பொன்.ராதாகிருஷ்ணன், முழு அடைப்பு, குமரி

Leave a Reply

Your email address will not be published.