குமரியில் பொன்னாரை முந்தும் ஆர்.காந்தி: கவர்னர் ஆகிறாரா?

குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கோஷ்டியாகவும், ஆர்.காந்தி ஒரு கோஷ்டியாகவும் இருந்து வரும் நிலையில் தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் குமரி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளதால் ஆர்.காந்தி கோஷ்டி முந்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

குறிப்பாக கன்னியாகுமரி வந்திருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆர். காந்தியை நேரில் சந்தித்து அரை மணிநேரம் ஆலோசனை நடத்திய பின்னர் ஆர்.காந்தி ஆளுநராகப் போவதாக குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகளிடையே ஒரு தகவல் பரவி வருகிறது.

குமரியில் ஆர்.காந்தி கை ஓங்கிவிட்டால், பொன்னார் அரசியல் செய்வது கடினம் என பாஜகவின் ஒரு குழுவினர் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply