குப்பை பொறுக்கி கொண்டே பள்ளிக்கு செல்லும் சிறுமி!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனிஷா என்ற இந்த சிறுமி தனது தந்தையை நான்கு வயதிலேயே இழந்தார். தாயார் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்க, 11வது வயதில் தாயாருக்கு உதவியாக அதிகாலையில் குப்பை பொறுக்கிவிட்டு பின்னர் பள்ளிக்கு சென்றுள்ளார்.

தற்போது 8ஆம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி 8வது வகுப்பு இறுதித்தேர்வில் 77% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நன்றாக படித்து பெரிய ஆளாகி தனது தாயாரை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இவரது கனவாம். இவரது பேட்டியை கேட்கும்போதே கண்ணீர் வரும் அளவுக்கு உருக்கமாக உள்ளது. இவரது கனவு நனவாக வாழ்த்துவோம்

Leave a Reply