குப்பை கொட்டுவதை தவிர்க்க கமல் கட்சியினர் செய்த விஷயம்!

ஜான் ஜஹான் ரோடு சந்திப்பு அருகே உள்ள மசூதி எதிரில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்ற மசூதியை சார்ந்தவர்கள் பல மாதங்களாக முயற்சி செய்தும் அந்த இடத்தை சுத்தம் செய்ய முடியாமல் இருந்தது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் சென்னை தென்கிழக்கு மாவட்டம் சார்பாக இப்பிரச்சினைக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த பகுதியில் குப்பை கொட்டுபவர்களே மாநகராட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கப்பட்டிருந்தது. எந்த முன்னேற்றம் இல்லாததால் அடுத்த கட்டமாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி மூலம் இந்தப் பிரச்சனையை கமல் கட்சியினர் கொண்டு சென்றதால் நேற்று மாநகராட்சியினர் சுத்தம் செய்தனர்

மேலும் அதே இடத்தில் மீண்டும் குப்பை கொட்ட கூடாது என்பதற்காக மூன்று மதத்தைச் சேர்ந்த கடவுள்கள் படங்கள் கொண்ட பதாகை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியை சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களாலும் அவ்விடத்தில் வைக்கப்பட்டது. இனியாவது அந்த இடம் தூய்மையானதாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply