shadow

குப்பைக்கு செல்கிறது ஜெயலலிதாவின் கடிதங்கள். சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு தகவல்

subramanianswamy-jayaதமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க பிரதமருக்கு கடிதம் அவ்வப்போது எழுதி வந்தது குறித்து அனைவரும் அறிந்ததே. ராஜீவ் காந்தி கொலையாளி, காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, இட ஒதுக்கீடு போன்ற பல பிரச்சனைகளுக்காக பிரதமருக்கு தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்கள் எழுதிய கடிதங்கள் குப்பைத்தொட்டிக்குத்தான் செல்லும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால் அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பைக்கு தான் செல்கின்றன.

மருத்துவ நுழைத்து தேர்வுக்கு எதிராக அவர் எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு தான் செல்லும். அதுபோன்று ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய சொல்லியும் அவர் கடிதம் எழுதி வருகிறார் என கூறியுள்ளார்.

ஒரு முதல்வர் எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகத்தின் குப்பைக்கு செல்லும் என எம்பி ஒருவரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *