குணமாகிய கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சித் தகவல்

குணமாகிய கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தாலும் தற்போது அந்நாட்டு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஓரளவு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது

ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்பதும் ஒரு சந்தோசமான விஷயம்

ஆனால் கொரோனாவால் குணமடைந்த ஒரு சிலரை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

தற்போதைய தகவலின்படி சீனாவில் குணமடைந்து வீடு திரும்பிய 14 சதவீத மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது இந்த தகவலை சீனாவின் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளதால் சீனாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீனாவை போன்று ஜப்பானிலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நபர்கள் ஒரு சிலருக்கு அந்த வைரஸின் தாக்கம் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரே நபரை மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குவது எப்படி என்பது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்

Leave a Reply