குட்டை பாவாடை, குட்டை தலைமுடிக்கு தடை: வடகொரியா அரசு அட்டூழியம்

குட்டை பாவாடை, குட்டை தலைமுடிக்கு தடை: வடகொரியா அரசு அட்டூழியம்

வடகொரியா மக்கள் அந்நாட்டு அதிபரிடம் கிட்டத்தட்ட அடிமை போலவே வாழ்ந்து வருகின்றனர் என்பது அந்நாட்டில் இருந்து தப்பி அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் கூறும் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு அந்நாட்டில் சுத்தமாக சுதந்திரமே இல்லை என்றும், தலை முடியை வெட்டி அழகாக குட்டையாக வைக்க கூடாது என்றும், இறுக்கமான பேண்ட் மற்றும் குட்டை பாவாடை (‘மினி ஸ்கர்ட்’) அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் வடகொரியா நாட்டில் சினிமா தியேட்டர் மற்றும் கேளிக்கை விடுதி என்பதே கிடையாது. அங்குள்ள மக்கள் வீட்டை பூட்டிக் கொண்டு தென்கொரியாவில் இருந்து கடத்திவரப்பட்ட சினிமா பட சி.டி.க்களை மட்டுமே பார்க்கின்றனர். ஆனாலும் ரோந்து வரும் அதிகாரிகளிடம் சிக்கினால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply