குடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா? 2வது மனைவிக்கா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குடும்ப ஓய்வுதியம் விவாகரத்து பெற்ற மனைவிக்கு கிடைக்க உரிமை இருக்கிறதா? என்பது குறித்து சென்னை நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

முதல் மனைவி விவாகரத்து பெற்று விட்டால் குடும்ப ஓய்வூதியம் உரிமை பெற அவருக்கு உரிமை கிடையாது என்றும் இரண்டாவது மனைவிக்கு தான் ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முதல் மனைவியை விவாகரத்து பெற்றது மட்டுமின்றி முதல் மனைவி இறந்து விட்டாலும் இரண்டாவது மனைவி தான் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

எனவே முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ 2வது மனைவிக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையுள்ளது என இந்த உத்தரவின் மூலம் தெரிய வருகிறது

Leave a Reply