குடியுரிமை சட்டத்திற்கு மாநிலங்கள் எதிர்ப்பு: மத்திய அரசு அதிரடி

குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை ஒருசில மாநிலங்கள் அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க பரிசீலித்து வருகிறது. இந்த சட்டத்தை மாநில அரசின் உதவி இல்லாமல் இணையதளம் மூலம் அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசு அமல் செய்துள்ள குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ‘பாதுகாப்பு, வெளியுறவு, ரெயில்வே, குடியுரிமை உள்ளிட்டவை மத்திய பட்டியலில் இருப்பதாகவும், மத்திய அரசின் பட்டியலில் உள்ள மத்திய சட்டத்தை அமல்படுத்துவற்கு மறுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமனம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திர்கான விண்ணப்ப நடைமுறை, ஆவணங்கள் பரிசீலனை, குடியுரிமை வழங்குதல் என ஒட்டுமொத்த நடைமுறையையும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள யோசித்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். இதனால் மாநில அரசு எதிர்த்தாலும் குடியுரிமை சட்டம் அமல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply