கிரெடிட் கார்டு பிசினஸில் இறங்கும் ஓலா, பிளிப்கார்ட்

வழியில் போவோர் வருபவர்களிடம் எல்லாம் கிரெடிட் கார்டு வேண்டுமா? என்று கேட்கும் அளவுக்கு கிரெடிட் கார்டு மலிவாகிவிட்ட நிலையில் தற்போது ஓலா மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களும் கிரெடிட் கார்டு பிசினஸில் இறங்கவுள்ளன

இதற்காக எஸ்.பி.ஐ வங்கியுடன் ஓலா கைகோர்க்கும் உள்ளதாகவும், இதற்கான முதல்கட்ட பணிகள் அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓலாவிற்கு சுமார் 15 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதால் முதல் ஆண்டிற்குள் 10 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

அதேபோல் இன்னொரு பிரபல நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனமும் ஆக்சிஸ் வங்கி அல்லது ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் கைகோர்த்து கிரெடிட் கார்டு சந்தையில் நுழைய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply